நிவர் புயல் காரணமாக கனமழை பொழியும் என்பதால் தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் என முதல்வர் அறிவித்துள்ளார்.
நாளை அரசு அலுவலகங்கள், கல்வி அலுவலகங்கள் இயங்காது என்றும் அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் என்று முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் நிலைமைக்கு ஏற்றவாறு விடுமுறை நீட்டிக்கப்படும் என்றும் மக்கள் இந்த நேரங்களில் பாதுகாப்பாக இருப்பதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.