தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் நேரடியாக சந்திக்கவுள்ளார். பொதுமக்களிடம் சந்தித்து நேரடியாக மனுக்களை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுடைய கோரிக்கையும் நேரடியாக கேட்டு வருகிறார்.