மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மாலை தமிழகம் வருகிறார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 24-ந் தேதி புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக நாளை மாலை சென்னை வருகிறார். இதையொட்டி நாளை இரவு சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள CRPF அலுவலகத்தில் தங்குகிறார். அதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக நாளை மறுநாள் புதுச்சேரிக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
அதைத்தொடர்ந்து புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மகான் அரவிந்தரின் 150-வது ஆண்டு விழா, கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். மேலும் கம்பன் கலையரங்கத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.