Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாளை பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை… பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகள் நாளை பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். தற்போது வரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு மத்தியில் கடந்த குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி, அதன் பிறகு சாலை மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

அவ்வாறு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் நாளை பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகள் நாளை ரயில் மறியலில் ஈடுபட உள்ளதையொட்டி பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |