தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்கு மத்திய குழு தமிழகத்திற்கு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக, மழை வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதுட்டுமின்றி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை பாதிப்பு மற்றும் வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் 7 பேர் கொண்ட மத்தியக்குழு நாளை மறுநாள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.