சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்ததையடுத்து, செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.. மேலும் ஆசிரியர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவருமே தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவ தொடங்கியதால் அங்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.. இதில் தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.. கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கொரோனா பரவாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது..