Categories
தேசிய செய்திகள்

BREAKING : நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்…. வெளியான முக்கிய அறிவிப்பு ….!!!

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல் படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

தென்னாப்பிரிக்காவிலிருந்து கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று ஒமைக்ரான் என்ற வடிவத்தில் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கியது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களும் தீவிர கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |