புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மது கடைகள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து மதுபானங்களின் விலையை உயர்த்தப்படுவதாக கலால்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. மது பானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதனால் 100 ரூபாய்க்கு விற்கப்படும் மதுபானம் ரூ.120 க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.