Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை முதல் முழு ஊரடங்கில் புதிய தளர்வு…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. பொது மக்களின் தேவைக்காக நடமாடும் காய்கறி வண்டிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் ஆன்லைன், தொலைபேசி வாயிலாக மே 31-ஆம் தேதி முதல் மளிகை பொருட்களை விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் கூறும் பொருள்களை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்யலாம். BIG basket, lucious, Dunzo போன்ற நிறுவனங்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்ய அனுமதி. சூப்பர் மார்க்கெட்டுகள் அத்தியாவசிய பொருள்களை e- commerce மூலம் விநியோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |