தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மக்கள் தேவையில்லாமல் வெளியில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக நாளை முதல் மே 24-ஆம் தேதி வரை மெட்ரோ ரயில்கள் எதுவும் இயங்காது என்ற மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் நாளை ஊரடங்கு அமல் ஆக இருப்பதால் இன்று காலை 7 மணி முதல் மெட்ரோ ரயில்கள் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.