நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி 6 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டும் வகுப்புகள் நடைபெறும். பஇறுதி பருவ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை மட்டுமே நேரடி வகுப்புகள் மூலம் நடத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளார்.