புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொடர் மழை காரணமாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பல்வேறு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1 முதல் 9ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.