நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் , கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. முக்கிய 4 குற்றவாளிகளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு குற்றவாளிகளும் தங்களுக்கான சட்ட வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் ஒரு குற்றவாளியான வினய்சர்மாவின் தண்டனையில் இருந்து கருணை காட்ட குடியரசு தலைவருக்கு மனு அனுப்பியதை குடியரசு தலைவர் நிராகரித்தார். தன்னுடைய கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வினய் சர்மா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கருணை மனுவை குடியரசுத்தலைவர் உரிய முறையில் ஆராயவில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது என்றும் , மேலும் வினய் சர்மாவின் மருத்துவ அறிக்கை கருணை மனுவுடன் குடியரசுத்தலைவருக்கு அனுபிவைகப்பட்டது. குற்றவாளி வினய் சர்மா நல்ல உடல், மனநலத்துடன் உள்ளார் என்று கூறி வினய் சர்மா மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.