நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் உடல்நலம் குறித்து விசாரணை செய்ய உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் உடல்நிலை, மனநிலை பற்றி தேசிய மனித உரிமை ஆணையம் ஆய்வு செய்ய கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தற்போது விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முதலில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுக மனுதாரருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.