Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்!!

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது.. தற்போது அந்த சட்ட மசோதா தாக்கல் செய்திருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.. தாக்கல் செய்த பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

நீட் தேர்வு காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையும் கனவுகளும் தகர்ந்துள்ளது. நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது. சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின், பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது என்று கூறினார்..

முன்பாக முதல்வர் முக ஸ்டாலின், நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. எதிர்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்..இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகள் எழுப்பி குற்றச்சாட்டை முன்வைத்தார்..

இதனால் முதல்வர் ஸ்டாலின் ஈபிஎஸ் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.. அதனைத் தொடர்ந்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.. இந்த நிலையில் தற்போது சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது..

Categories

Tech |