தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தினால் சேலத்தைச் சேர்ந்த தனுஷ் மற்றும் அரியலூரைச் சேர்ந்த மாணவி கனிமொழி என அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, நேற்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நீட் தேர்வி எழுதிய மாணவி சவுந்தர்யா, தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு ஊரப்பாக்கம் அய்யநேரி பகுதியைச் சேர்ந்த மாணவி அனுசியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 40 சதவீத தீக்காயங்களுடன் மாணவி அனுசியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.