அடுத்த மாதம் செப்டம்பர் 12ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. மாணவர்கள் இதற்காக பதிவு செய்திருந்தனர்.. இந்த நிலையில் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதப்போகும் மையங்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வு மையங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.. விரைவில் அவர்களுக்கான ஹால் டிக்கெட்டும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓஎம்ஆர் தாளை பூர்த்தி செய்யும் நடைமுறை குறித்தும் இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம்..
Categories