நாடு முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை மாணவர்களினுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தேசிய தேர்வு முகமை அனுப்பியுள்ளது.
Categories