அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவரின் மகள் கனிமொழி நாமக்கல் கீரீன் கார்டன் பள்ளியில் 12 ஆம் படித்து முடித்து இறுதி தேர்வில் 562.28 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கனிமொழி நேற்று முன்தினம் நடந்து முடிந்த நீட் தேர்வை தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் எழுதினார். நேற்று முழுவதும் தந்தையுடன் இருந்த மாணவி மாலை துளாரங்குறிச்சியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பெற்றோர் மாணவியின் உடலை சொந்த ஊரான சாத்தம்பாடி கிராமத்திற்கு எடுத்து சென்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.