Categories
மாநில செய்திகள்

#BREAKING: நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பினார்.

இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் நீட் விலக்கு மசோதா நிறைவேறியது. பாஜக உறுப்பினர்கள் மட்டும் வெளிநடப்பு செய்தனர். பேரவையில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு இன்றே அனுப்பி வைக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

Categories

Tech |