தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால்ஒரு சில பகுதிகளில் மழைநீர் வெள்ளம் நீர் போல தேங்கி காட்சியளிக்கிறது. எனவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர், கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதி மன்ற மதுரை கிளை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .நீதிமன்றத்திற்கே இந்த நிலைமை என்றால் பொது மக்களின் நிலைமை என்ன? என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Categories