நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது மட்டுமல்லாமல் வீடுகள், நிறுவனங்கள் போன்றவற்றை கட்டிக் கொள்கின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் “மாநிலம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்பை ஆக்கிரமிப்பு பற்றி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்” என்று தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.