வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி கரையை கடக்கும் என்று இந்திய ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை அருகே வட தமிழகம், தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தெற்கு, தென்மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், நாளை சென்னை-புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.