தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறையில் 4 புதிய கோட்டங்களை ஏற்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம், செய்யாறு, ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு கோட்டங்களுக்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. நான்கு புதிய கோட்டங்கள் ஏற்படுத்த படுவதால் 83 புதிய பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை பணிகள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்த ஏதுவாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Categories