Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : நெருங்கும் மாண்டஸ் புயல்.! 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10.12.22) விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ்  புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மித கன மழை பெய்து வருகின்றது.

வேகமாக வீசக்கூடிய காற்றின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்வது, மின்சார கம்பங்கள் சாய்ந்து விழுவது, வீடுகள் நொறுங்கி விழுவது என ஆங்காங்கே  நிகழ்ந்து வருகிறது. தமிழக அரசு மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டத்தில் நாளை (10.12.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் தற்போது கடலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மொத்தம் 8 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.

Categories

Tech |