நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கினர். அதில் முருகன் மற்றும் விஜய் ஆகிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பதினெட்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட செல்வம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அதன் பிறகு இடிபாடுகளில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணி நீடித்து வந்தது. அதில் நாப்பத்தி ஏழு மணி நேர போராட்டத்திற்கு பிறகு நான்காவது நபர் முருகன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. இந்நிலையில் குவாரியில் பாறைகளுக்கும் சிக்கியிருக்கும் ஐந்தாவது நபர் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். பாறைகளுக்கு ஐந்தாவது நபர் இருக்குமிடம் கண்டறியப்பட்ட நிலையில் கிரேன் வந்த பிறகு அவரை மீட்கும் பணி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.