திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 17ம் தேதி காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர். சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் சுவர் இடிந்து விழுந்ததில் கழிவறைக்கு சென்ற 5 மாணவர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கில் பள்ளி தலைமையாசிரியர், தாளாளர் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரருக்கு நெல்லை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த விபத்து தொடர்பாக 4 ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.