நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து பள்ளி கல்லூரி மாணவர்களையும் கொரோனா குறிவைத்து வந்ததால் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மருத்துவ கல்லூரிகள், நரசிங் கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார். ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். தேர்வுகளை வரும் 31 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.