கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரளா அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்காக எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் செருவேலி எஸ்டேட் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அருகிலேயே விமான நிலையம் அமைப்பதற்கான புதிய அரசாணையை அரசு பிறப்பித்தது. கடந்த 2018-ம் ஆண்டு சர்வதேச டெண்டர் கோரப்பட்டு ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது 307 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.