Categories
தேசிய செய்திகள்

BREAKING : பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்.!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை பெருமை அடைய செய்யக் கூடியவராக இருப்பார் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் பகவந்த் மான் பஞ்சாப் மாநிலம் சங்குரூர் மக்களவைத் தொகுதி எம்பியாக இருந்து வருகிறார். ஆம் ஆத்மி சார்பில் தொலைபேசி மூலம் கருத்து கேட்டு பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்..

Categories

Tech |