Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: பட்டாசு தயாரிப்பில் விதிமீறல்கள் – உச்சநீதிமன்றம் கடும் கோபம் …!!

 

பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் விதிகளை மீறி பட்டாசு தயாரித்து இருப்பதாக சிபிஐ முதற்கட்ட அறிக்கையில் தகவல்கள் இருக்கிறது என்று நீதிபதிகள் குறிப்பிடுகிறார்கள்.

இது சம்பந்தமான வழக்கில் நேற்றைய தினம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை உற்பத்தி செய்கிறீர்கள் என்று கேள்வியை முன் வைத்தார்கள். இந்த நிலையில் நீதிபதிகள் இந்த தகவல் தெரிவித்திருக்கிறார்கள்
இன்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்றத்தில்  நடைபெற்றது. இதில் சிபிஐ தரப்பில் பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில் எதிர் மனுதாரர் தரப்பில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தரப்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் முக்கியமான விஷயங்கள் சொல்லப்பட்டாலும், கூட உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஒவ்வொரு வார்த்தைகளும் பட்டாசு தொழிற்சாலைகள் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் ? எதிர்காலத்தில் எங்கே போகிறது ? என்பது சம்பந்தமான ஆழமான பார்வையை முன் வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் சிவகாசியிலிருக்கும் பட்டாசு  நிறுவனங்கள் கடுமையான விதிமீறல்களில்   ஈடுபட்டிருக்கிறார்கள். தடை செய்யப்பட்ட கலவைகளை பயன்படுத்தி இருக்கிறீர்கள்.  ரசாயனங்களை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை சிபிஐ முதல்கட்ட அறிக்கையை மிகத் தெளிவாக காட்டுகிறது. இதற்காக உங்களை நாங்கள் சிறைக்கு கூட அனுப்ப முடியும் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இத்தனை விதிமீறல்களை  நீங்கள் செய்திருக்கிறீர்கள் நாங்கள் ஏன் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது ?  உங்களுக்கு ஏன் தண்டனை கொடுக்கக் கூடாது என்பதை விளக்குமாறு தற்பொழுது நோட்டீஸ் என்பது பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |