ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் வீட்டில் 84 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமாரின் பங்களாவில் இருக்கும் கிடங்கில் 84 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும்படை சோதனை நடத்தியது. மேலும் வாக்காளர்களுக்கு பணத்தை தர ஆந்திராவில் இருந்து அழைத்து வந்த 30 இளைஞர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.