நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில், ஏராளமானோர் தொற்று காரணமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ரூபாய் 50,000 இழப்பீடு தொகையாக பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சற்றுமுன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இழப்பீடு உதவித்தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி https://www.tn.gov.in இல் வாட்ஸ்அப் நியூ பகுதியில் Ex-Gratia For Covid-19 -இல் விண்ணப்பிக்கலாம்.