Categories
மாநில செய்திகள்

BREAKING: பணி நிரந்தரம், ஊதியம் உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 6 ஆம் தேதி முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நிரந்தர பணிக்கு மாற்றப்பட்ட செவிலியர்கள் கொரோனா பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தற்போது 15 ஆயிரம் சம்பளம் பெற்று வந்த செவிலியர்களுக்கு இனி 40 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |