ஒமைக்ரானால் பதற்றம் அடைவதை விட, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட.து இதில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த 47 வயதுடைய ஒரு நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒமைக்ரானால் மக்கள் பதற்றம் அடைவதை விட, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 1, 400 மெட்ரிக் டன் அளவிற்கு மருத்துவ ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது. தமிழக மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 15 சதவீதம் பேர் இன்னும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.