Categories
மாநில செய்திகள்

BREAKING : பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை….. ஐகோர்ட் அதிரடி..!!

பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி ஓட்டு மொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று ஒரு யூடியூப் சேனலில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதுதொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக அவர் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன், புகழேந்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் நேரில் ஆஜரானார், தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். இதையடுத்து வழக்கின் உத்தரவு பிறப்பிப்பதற்காக சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு சவுக்கு சங்கருக்கு தற்போது 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டனர். இந்த சிறை தண்டனை குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.

 

 

Categories

Tech |