ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாகவே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், குப்வாரா மாவட்டம், மச்சிலி செக்டாரில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் சிக்கினர். இதில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Categories