Categories
மாநில செய்திகள்

BREAKING: பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு?… தமிழகத்தில் பெரும் பரபரப்பு…!!!

தமிழகத்தின் சில பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார் மற்றும் கொள்ளிடத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அது பயங்கர வெடி சத்தத்துடனான நில அதிர்வு. காரைக்கால் பகுதியிலும் உணரப் பட்டதாகவும், விமானம் போன்ற ஒன்று தாழ்வாக பறந்து சென்று அதற்குப் பிறகு நில அதிர்வு உணர்ந்ததாகவும் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது என்று எந்த காரணமும் தெரியவில்லை. அதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

Categories

Tech |