தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் அறிவித்து வருகிறது. அதன்படி தமிழக விவசாயிகளுக்கு ரூ.10,000 கோடிக்கு மேல் பயிர்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “விவசாய பணிகளுக்காக பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களில் நிர்ணயித்த விலைக்கு மேல் காய்கறிகள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு பற்றாக்குறை இல்லாமல் அனைத்து உரங்களையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.