பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராமங்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவில் உள்ள 8 பேருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம மக்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் தா.மோ அன்பரசன், தங்கம் தென்னரசு, ஏ.வ வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்துவதாக பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக் குழு அறிவித்துள்ளது.