முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வீட்டிலும் அவருக்கு சொந்தமான பல இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று திமுக அரசுக்கு எதிராக ஓபிஎஸ்- இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பழிவாங்கும் நடவடிக்கையை விட்டுவிட்டு மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள். எஸ்.பி வேலுமணி மீது அவதூறு பரப்பும் வகையில் பொய் குற்றச்சாட்டு கூறிய நிலையில் சோதனை நடைபெறுவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.