Categories
தேசிய செய்திகள்

BREAKING: பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து…. அரசு புதிய அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதை குறித்து முடிவான முடிவு அறிவிக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.  இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழக கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறுவதாக இருந்த நிலையில், இளங்கலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு, முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இன்டெர்னல் மதிப்பெண்  அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் பல்கலைக்கழக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது

Categories

Tech |