தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இறுதித்தேர்வு முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திட்டமிட்டபடி 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதியும், 12 ஆம் + வகுப்பு மாணவர்களுக்கு 20ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை தூய்மைப்படுத்த தலைமை ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது என்று தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.