புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளை மூட ஆளுநர் சுகாதாரத் துறைக்கு பரிந்துரைத்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்து வருகின்றது. சில தினங்களுக்கு முன்புதான் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை உடன் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு ஆளாகி உள்ளது. புதுச்சேரியில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் பள்ளிகளை தற்காலிகமாக மூட ஆளுநருக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. புதுச்சேரி சுகாதாரத்துறை ஆணையர் இந்த பரிந்துரையை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு அளித்துள்ளார்.