நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் ஜூலை 15 முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மேலும் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான கல்லூரிகளும் ஜூலை 15 முதல் திறக்கபடுகிறது. ஹரியானாவிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .இதையடுத்து தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.