தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி காஞ்சிபுரம்-திருவளர்செல்வி, விருதுநகர்-ஞான கௌரி, ராமநாதபுரம்-பாலமுத்து, தி.மலை- அருள்செல்வம், நாமக்கல்- மகேஸ்வரி, நெல்லை-சுபாஷினி, கடலூர்-பூபதி ராணிப்பேட்டை- உஷா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.