தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏசி வசதியுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஏசி வசதியுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்கு மீண்டும் ஏசி வசதியுடன் பேருந்துகளை இயக்கலாம் என்ற அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக பேருந்துகளில் ஏற்றி வசதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.