கனமழை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.