Categories
மாநில செய்திகள்

BREAKING :  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் இன்று விருதுநகர், மதுரை, நாமக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மேலூர், சோழவந்தான், திருப்பரங்குன்றம், மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதனால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்திற்கு மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |