Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு… தடாலடி அறிவிப்பு..!!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 60 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த ஐந்து மாவட்டங்களிலும் தேர்தல் களம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தங்களது வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

அந்நிலையில் புதுச்சேரி பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 60 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ .1000 வழங்கப்படும் என்றும், நீட் தேர்வு ரத்து, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குதல் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளது.

Categories

Tech |